உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எச்சரிக்கை விளக்கு இல்லாமல் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

எச்சரிக்கை விளக்கு இல்லாமல் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.இவ்வொன்றியத்தில் புழுதிபட்டி அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டி விலக்கில் தானியங்கி எச்சரிக்கை விளக்கு பொருத்தப்படாததால் விபத்து தொடர்கிறது. நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏராளமானோர் டூவீலரில் திரும்பும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளனர். நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு அப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனாலும் துாரத்தில் இருந்து வரும் வாகனங்கள் விலக்கு ரோடு இருப்பதை அறிந்து கொள்ளும் விதமாக சென்டர்மீடியனில் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் விபத்துகள் இன்னும் தொடர்ந்து வண்ணம் உள்ளது. எனவே புழுதிபட்டி உள்ளிட்ட அனைத்து விலக்கு ரோடுகளிலும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகளை பொருத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ