உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலங்குடி கருப்பர் கோயில் மாசித்திருவிழா

வேலங்குடி கருப்பர் கோயில் மாசித்திருவிழா

கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் அருகே வேலங்குடி சாம்பிராணிவாசகர், உறங்காப்புளி கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா பிப்.23ல் இரவு காப்பு கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து அங்காளம்மன் கோயிலிருந்து கருப்பர் கோயிலுக்கு சாமி அழைப்பு நடந்தது. சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடும், மறுநாள் பாரி வேட்டை கொண்டாட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் முதல்நாள் திருவிழாவன்று சாமியாட்டம் நடந்தது. நேற்று காலை முதல் சுற்று வட்டாரக்கிராமத்தினர் கோயில் முன் எழுந்தருளியுள்ள கருப்பரின் புரவிக்கு நீண்ட மாலை, வேட்டி, துண்டு அணிவித்தும், சாம்பிராணி புகைத்தும் வழிபட்டனர். மேலும் தங்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்குதல், கரும்பு தொட்டில் கட்டுதல், ஆலய மணி கட்டுதல், அரிவாள் செலுத்துதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர். அப்பகுதி முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இன்று 3 ம் திருவிழாவும், நாளை மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெறும். கருப்பன்பட்டியில் அரிவாளில் சாமியாடி, கருப்பர் கோயில் வந்து சாமியாட்டத்துடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை