கேட் வால்வில் நிரம்பிய தண்ணீர் விபத்து அபாயம்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியக் கிராமங்களில் 'ஜல் ஜீவன்' குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.திருப்புத்தூர் அருகே என்.புதுார் கண்மாய் பகுதியில் குடிநீர்திட்ட கேட் வால்வு அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பணி முடிந்து பல மாதங்களாகியும் தொட்டி போன்ற கேட் வால்வு பகுதியில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இப்பகுதியில் கால்நடைகள் மேயும் பகுதி என்பதால் இதில் ஆடு, மாடுகள் விழும் அபாயம் உள்ளது. குடிநீர் வாரிய அலுவலர்கள் இப்பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.