மேலும் செய்திகள்
வலிப்பு நோயால் விவசாயி பலி
31-Aug-2024
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருமணம் முடிந்த 10 நாட்களில் டூவீலர் விபத்தில் மனைவி இறந்ததால் கணவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.தேவகோட்டை வளங்காவயலைச் சேர்ந்த ராமையா 33, துபாயில் வேலை செய்கிறார். இவருக்கும் பரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துமணிக்கும் 24, பத்து நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. செப்., 18 மதியம் 2:30 மணிக்கு வளங்காவயலில் இருந்து பரியன்வயல் மாமனார் வீட்டிற்கு டூவீலரில் மனைவியுடன் விருந்துக்கு ராமையா சென்றார்.ஆறாவயல் தனியார் மில் அருகே டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. முத்துமணி மீது டூவீலர் விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. காரைக்குடி தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் முத்துமணி இறந்தார்.ராமையா தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய ராமையா மனைவி இறந்த கவலையில் விஷம் சாப்பிட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.ஐ., அன்சாரி விசாரிக்கிறார்.
31-Aug-2024