உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் 21 வது கால்நடை  கணக்கெடுப்பு பணி துவக்கம் 

சிவகங்கையில் 21 வது கால்நடை  கணக்கெடுப்பு பணி துவக்கம் 

சிவகங்கை: மாவட்டத்தில் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணி 2025 பிப்., 28 ம் தேதி வரை நடைபெற உள்ளது.கால்நடைத்துறையினர் சார்பில் கால்நடை வளர்ப்போர் இடங்களுக்கு சென்று, கால்நடை இருப்பு விபரங்களை கணக்கெடுக்க உள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் 158 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 33 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமங்கள் தோறும், நகரில் வார்டு வாரியாக இக்கால்நடை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.இதில், பசு, காளை, எருமை, நாய் உட்பட 16 வகையான கால்நடைகள் கணக்கெடுக்கப்படும். இவற்றை துல்லியமாக மேற்கொண்டால் தான், எதிர்காலத்தில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசி, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால், பாலாடை கட்டி, பன்னீர், தயிர், வெண்ணெய், நெய், ஆட்டு இறைச்சி, முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய இக்கணக்கெடுப்பு உறுதுணை புரியும். கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ரேபிஸ் என்ற வெறிநோய், புருசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க முடியும்.கால்நடை வைத்துள்ளோரின் பெயர், முகவரி, ஆதார், அலைபேசி எண், தொழில், நிலத்தின் அளவு, கால்நடைகள் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும். எனவே கால்நடை கணக்கெடுக்க வரும் கால்நடைத்துறை அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை