மழைக்கு 25 வீடுகள் சேதம்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஒரு ஓட்டு வீடு முழுவதும் சேதம், 24 ஓட்டு வீடுகள் பகுதி சேதமாகியுள்ளன. காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை, காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வீடுகள் சேதமானதாக வருவாய்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.