உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் விபத்தில் 3 பேர் காயம்

டூவீலர் விபத்தில் 3 பேர் காயம்

தேவகோட்டை : தேவகோட்டை அருகே காரைபுதுக்கோட்டை சரண்யா 40. இவரது மகள் காவியா 13, உறவினர் மகள் சாருமதி 17 ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் நல்லாங்குடி கோயில் திருவிழா சென்று டூவீலரில் கிராமத்திற்கு திரும்பினர்.தச்சவயல் பொட்டல் குடியிருப்பு அருகே அறுந்து கிடந்த மின்கம்பி மீது டூவீலர் ஏறியதும், நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 3 பேரும் காயமுற்றனர். தேவகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ