கத்திக்குத்து 4 பேர் கைது
சிவகங்கை:சிவகங்கை காயிதேமில்லத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜாகித் 29. இவரை ஜூன் 6 இரவு சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் இவரை சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நகர் போலீசார் தொடர்புடைய பேட்டை தெரு அல் அமீன், மதுரை முக்கு தருண், பிரபாகரன், அரவிந்த் ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாகித் நண்பர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டுவதில் பிரச்னை இருந்ததும்அதனால் கத்திக்குத்து நடந்திருப்பதும் தெரியவந்தது.