உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாடு திருடிய 5 பேர் கைது

மாடு திருடிய 5 பேர் கைது

தேவகோட்டை, : தேவகோட்டையில் பல கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாடுகளை விட்டுள்ளனர். இந்த மாடுகள் பல ரோடுகளில் திரிகின்றன. நேற்று முன்தினம் கண்ணங்குடி அருகே தேவன்டதாவு கிராமத்தின் வழியே சிலர் ஒரு வேனில் மாட்டை ஏற்றி சென்றுள்ளனர். கிராமத்தினருக்கு சந்தேகம் ஏற்படவே வேனை மறித்து விசாரித்ததில் மாடுகள் திருடியதை ஒப்புக் கொண்டனர். பிடிப்பட்டவர்களை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மாடுகளை திருடியதாக ஆவுடையார்கோவில் அய்யனார் 38, மணல்மேல்குடி அய்யப்பன் 25, ஏழுமலை 21, மணிகண்டன் 20, மற்றும் தஞ்சாவூர் மாதவன் 25, ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மாடு, சரக்கு வேன், ஒரு டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை