50 சதவீத படிவம் வழங்கல்: சேகரிப்பு துவக்கம்
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணியில் கணக்கெடுப்பு படிவங்கள் 49 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிவங்கள் சேகரிக்கும் பணியையும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் துவங்கியுள்ளனர். திருப்புத்துார் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கான வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 50 சதவீத அளவில் வழங்கப்பட்டு உள்ளது. நவ.4 முதல் படிவங்களை வாக்காளர் களின் வீடுகளுக்கு சென்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்குகின்றனர். காலை 7:00 முதல் 10:00 மணி வரை மற்றும் மாலை 5:00 முதல் 6:00 மணி வரையிலும் இந்த பணி நடைபெறுகிறது. கிராமங்களில் வினி யோகம் எளிதாக உள்ள தாகவும், நகர் புறங்களில் ஓட்டுச் சாவடி எல்லைக்குள்ளேயே பலர் முகவரி மாறி உள்ள னர். பக்கத்து ஓட்டுச் சாவடிக்கு முகவரி மாறிச் சென்றவர்களும் உள்ளனர். நகர் புறங்களில் வாக்காளர்களை கண்டுபிடிப்பதில் சிரமமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று வரை 49 சதவீத படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. படிவம் வழங்கும் பணியை காட்டாம்பூரில் டி.ஆர்.ஓ. செல்வ சுரபி பார்வையிட்டார். திருப்புத்துார் பகுதி யில் தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாங்கும் பணியையும் துவக்கி விட்டனர்.