சிவகங்கையில் 56 மி.மீ., மழை பதிவு
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று அதிகாலை அதிகபட்சமாக 56 மி.மீ., மழை பதிவானது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் ஏப்., 3 முதல் 5ம் தேதி வரை சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதையடுத்து நேற்று அதிகாலை 3:10 மணிக்கு திடீரென சிவகங்கை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சிவகங்கையில் அதிக பட்சமாக 56 மி.மீ., காளையார்கோவிலில் 37.60 மி.மீ., திருப்புவனத்தில் 18.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.