உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் ஒன்றரை மாதத்தில் 600 பேர் அட்மிட் 

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் ஒன்றரை மாதத்தில் 600 பேர் அட்மிட் 

சிவகங்கை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் வேகமாக பரவுவதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் செல்கின்றனர். இக்கால கட்டத்தில் காய்ச்சி வடித்த குடிநீர், குளிர்ச்சியற்ற பழச்சாறு பருக வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சிவகங்கை மாவட்டத் தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறையின் கீழ் 48 ஆரம்ப சுகாதார நிலையம், 4 நகர்புற சுகாதார நிலையம், காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கீழ் 13 தாலுகா அளவிலான மருத்துவமனைகள், சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்படுகின்றன. மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை அதிகளவில் கைகொடுக்காவிட்டாலும், வடகிழக்கு பருவ மழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஆரஞ்ச் அலர்ட் பட்டியலில் சிவகங்கையும் உள்ளது. இதனால் அக்.,15ல் இருந்தே வடகிழக்கு பருவ மழை தாக்கம் சிவகங்கையில் துவங்கிவிட்டது. தினமும் காலையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை, மாலையில் திடீரென பலத்த மழை என மாறி மாறி குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இந்த மழை விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்த போதிலும், மனிதருக்கு காய்ச்சல், வைரஸ், புளூ காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இதன் காரணமாக மாவட்ட அளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காய்ச்சலுடன் தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். செப்டம்பரில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைய தொடங்கின. இந்த மாதத்தில் மட்டுமே காய்ச்சலால் பாதித்து 423 பேர் உள்நோயாளி களாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அக்., 17 வரை 175 பேர் காய்ச்சலால் பாதித்து, சிகிச்சை பெற்று உள்ளனர். அரசு மருத்துவமனை தவிர்த்து தனியார் கிளினிக், மருத்துவமனைகளிலும் நுாற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பொதுமக்கள் குளிர்ச்சி யான கால கட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவ விடாமல் இருக்க, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை தான் பருக வேண்டும். காய்ச்சல் பாதித்தவர்களுக்கு நாக்கு வறண்டு, தாகம் அதிகம் எடுக்கும். அக்கால கட்டத்தில் குளிர்ச்சியற்ற நீர்சத்துக்கள் அதிகம் உள்ள பழச்சாறுகளை பருக வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்ற னர். தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால் அது 'புளூ காய்ச்சலாக' மாறக்கூட வாய்ப்பு உண்டு. இக்காய்ச்சல் நீடித்தால் உடல் சோர்வு ஏற்படும். இவற்றை அறிந்து மழை காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க, பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டாக்டர்கள் கூறிய தாவது: ஜனவரி வரை காய்ச்சலின் தாக்கம் இருக்கும். காய்ச்சல் பரவியவருக்கு உடல் வலியுடன் இருமல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இருக்கும். தொடர்ந்து சிகிச்சை எடுப்பதோடு, மேலும் பரவாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !