உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்தூரில் தெருநாய்கள் கடித்து 8 பேர் காயம்

திருப்புத்தூரில் தெருநாய்கள் கடித்து 8 பேர் காயம்

திருப்புத்தூர் : திருப்புத்தூரில் தெருநாய் கடித்து சிறுவர்,சிறுமியர், முதியவர்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.திருப்புத்தூர் நகரில் வாணியன்கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் சுற்றும் தெருநாய் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 10:00 மணி வரை தெருக்கள், ரோடுகளில் நடந்து சென்ற பலரைக் விரட்டி கடித்தது.இதில் வாணியன்கோயில் தெரு நிதிராஜ் 4, மகாஸ்ரீ 7, மூர்த்தி 24, பெரியார் நகர் அன்னலெட்சுமி 34, பொன்னழகு 40, காசி விஸ்வநாதன் 69, பட்டமங்களம் சஸ்டிகா 3, காட்டாம்பூர் நாகப்பன் 36 ஆகியோர் உட்பட 8 பேர்கள் வரை காயமுற்று, திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருப்புத்தூரில் அதிகரித்துள்ள தெரு நாய்கள் டூவீலர்களில் செல்பவர்களை குறி வைத்து விரட்டுகின்றன.அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு செல்ல மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை