உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குட்டையாக மாறிய நிழற்குடை: பரிதவிப்பில் பயணிகள்

குட்டையாக மாறிய நிழற்குடை: பரிதவிப்பில் பயணிகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி, எஸ்.புதுார் பகுதியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இவ்விரண்டு ஒன்றியங்களிலும் 51 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடைகள் உள்ளன. அவற்றில் பல 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சில இடங்களில் மட்டும் பழுதுபார்க்கப்பட்டும், புதிதாக கட்டப்பட்டும் உள்ளது. மற்ற இடங்களில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதால் அவை சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குப்பை, கழிவுநீர் சங்கமிக்கும் இடமாகவும் மாறி உள்ளது. இதனால் வெயில், மழைக் காலங்களில் பயணிகள் அவற்றை பயன்படுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே அனைத்து நிழற்குடைகளையும் ஆய்வு செய்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ