உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செட்டிகுறிச்சியில் ஆடித்திருவிழா

செட்டிகுறிச்சியில் ஆடித்திருவிழா

எஸ்.புதுார்; எஸ்.புதுார் அருகே செட்டிகுறிச்சி சோனை அழகாயி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு உரலில் எள் இடித்து படையல் போடப்பட்டது. பொங்கல் வைத்தும் வழிபாடு நடந்தது. அம்மனின் திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ