உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அபாகஸ் போட்டி மாணவர்கள் சாதனை

அபாகஸ் போட்டி மாணவர்கள் சாதனை

காரைக்குடி : காரைக்குடி பிரில்லியன்ட் அபாகஸ் அகாடமி மாணவர்கள், சென்னையில் நடந்த அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.சென்னை மதுரவாயலில் அபாகஸ் மெண்டல் அரித்மேட்டிக் டீச்சர்ஸ் அசோசியேசன் சார்பில் போட்டிகள் நடந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் காரைக்குடி பிரில்லியன்ட் அகாடமி மாணவர்கள் 10 பிரிவில் நான்கு சுற்றுகளாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றனர். சிறந்த ஆசிரியருக்கான பரிசினை பிரில்லியன்ட் அபாகஸ் அகாடமி இயக்குனர் நீலாவதி பெற்றார். சிறந்த அபாகஸ் அகாடமி விருதையும் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை