அடிக்கடி பழுதாகி நிற்கும் ஏ.சி., ஒன் டூ த்ரீ பஸ்கள்
காரைக்குடி : காரைக்குடியில் இருந்து திருச்சி மதுரை செல்லும் ஒன் டூ த்ரீ பஸ்களை முறையாக பராமரிக்காததால், பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கின்றனர். அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கோட்டம் சார்பில் காரைக்குடியில் இருந்து திருச்சி, மதுரைக்கு ஒன் டூ த்ரீ மற்றும் ஏ.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு ஏ.சி., பஸ்கள் 5, 20 க்கும் மேற்பட்ட ஒன் டூ த்ரீ பஸ்களும், மதுரைக்கும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் ஒருவித அச்சத்துடன் பயணிக்கின்றனர். பிற பஸ்களை அதிக கட்டணம் வசூலித்தும், முறையாக பராமரிக்காமல் ஓட்டுவதால் விபத்து அச்சத்தில் பயணிகள் உள்ளனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ஏ.சி., மற்றும் ஒன் டூ த்ரீ பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.