உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் சேதமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம்

திருப்புத்துாரில் சேதமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தாசில்தார் குடியிருப்பு அருகே சேதமடைந்துள்ள நுாற்றாண்டு பழைய கட்டடத்தை அகற்ற பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் தாசில்தார் அலுவலகம் அருகில் நீண்ட காலமாக கோர்ட் இயங்கி வந்தது. பின்னர் சிவகங்கை ரோட்டில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் அந்தக் கட்டடத்தில் பொ.ப.து. கட்டடப்பிரிவு அலுவலகம் இயங்கியது. தற்போது சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது.100 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் அதை அகற்ற மக்கள் கோரியுள்ளனர். இந்த கட்டடத்தை அகற்றி விட்டு தாலுகா அலுவலகத்திற்கான நேர் வழிபாதையை உருவாக்க கோரியுள்ளனர். பொதுப்பணித்துறையினர் (கட்டடம்) கூறுகையில், 'புராதன கட்டடம் என்பதால் பராமரிக்க கோரப்பட்டது. நிதி அனுமதியாகவில்லை. தற்போது இக்கட்டடத்தை அகற்றி, அங்கு விருந்தினர் குடியிருப்பாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பழைய கட்டடம் அகற்றப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி