உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டிக் கிடந்த அங்கன்வாடி பணியாளர்கள் மீது நடவடிக்கை மைய ஊழியர்களுக்கு சம்பளம் ‛கட்

பூட்டிக் கிடந்த அங்கன்வாடி பணியாளர்கள் மீது நடவடிக்கை மைய ஊழியர்களுக்கு சம்பளம் ‛கட்

சிவகங்கை: மாவட்ட அளவில் பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையங்களின் பணியாளர், உதவியாளர்கள் மீது மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகப்பிரியா நடவடிக்கை எடுத்துள்ளார்.மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 1552 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். அன்றாடம் இங்கு சமைத்து வழங்கும் உணவை 24,000 குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர். அங்கன்வாடி மையங்களில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சத்தான உணவு, சத்து மாவு உள்ளிட்டவை வழங்கி, சரியான எடையில் குழந்தைகள் இருக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும்.அதே போன்று அங்கன்வாடி மையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளின் முகத்தை அலைபேசி மூலம் எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான அங்கன்வாடி மைய பணியாளர்கள் இப்பணிகளை செய்வதில்லை என புகார் எழுந்துள்ளது.மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முக பிரியா மாவட்ட அளவில் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு நடத்தினார். கல்லல் அருகே பிளாரில் கடந்த 10 நாட்களாக அங்கன்வாடி மையம் பூட்டி கிடந்துள்ளது. உரிய கணக்குகளை தயார் நிலையில் வைக்கவில்லை என்ற காரணத்தால் மைய பணியாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே போன்று பூட்டி கிடந்த அங்கன்வாடி மைய பணியாளர், உதவியாளர்களுக்கு அன்றைய பணி நாளுக்கான சம்பளத்தை ரத்து செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி