உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் வழங்க நடவடிக்கை

குடிநீர் வழங்க நடவடிக்கை

மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தினம்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மானாமதுரை பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் நுரையோடு வந்ததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று நுரையோடு வந்த குடிநீர் விநியோகத்தை சரி செய்து சுத்தமான குடிநீரை வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி