உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நான்குவழிச்சாலையில் கூடுதல் விளக்கு

நான்குவழிச்சாலையில் கூடுதல் விளக்கு

திருப்புவனம்: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களில் உயர் மின்கோபுர விளக்கு பொருத்த வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து உயர் மின்கோபுர விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.கீழடி, சக்குடி, பிரமனுார், டி.பாப்பான்குளம், படமாத்துார் விலக்கு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்து நடக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் தான் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதி இருட்டாக இருப்பதால் சாலையை கடக்கும்வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்திகள்வெளியானதையடுத்து சக்குடி விலக்கில் கடந்த இரு நாட்களாக விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !