உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் 

ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் 

சிவகங்கை,: சிவகங்கையில் மாநில ஆதிதிராவிடர் நல கண்காணிப்பு குழு கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியார்ராமு தலைமை வகித்தார்.அவை தலைவர் சேதுராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மதியழகன், வழக்கறிஞர் ஜெயபால், மாநில தலைவர் பூமிநாதன், மகளிரணி குணவதி, ரகசியமணி, மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் பாலு, ஒன்றிய செயலாளர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கையில் 200 பேருக்கு 'தாட்கோ' மூலம் பயிற்சி அளிப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி