உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., தீர்மானம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., தீர்மானம்

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றினர்.சிவகங்கை அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், குணசேகரன், நகர் செயலாளர்கள் ராஜா, மெய்யப்பன், ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், செல்வமணி, கருணாகரன், சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, ஜெயகுணசேகரன், செந்தில்குமார், பாரதிராஜா, சோனை ரவி, தசரதன், சரவணன், முருகன், சுப்பிரமணியன், மாசான், ராஜா, வடிவேல், திருவாசகம், ராஜமாணிக்கம்,கருப்பையா கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமியை தமிழக முதல்வராக்க அயராது உழைப்போம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெற்றிட ஒற்றுமையாக உழைப்போம். அ.தி.மு.க., 53ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அக்.17ம் தேதி அனைத்து கிளை வார்டுகளில் கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை