உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழைக்கு அச்சுறுத்தும் வேளாண் அலுவலக கட்டடம்

மழைக்கு அச்சுறுத்தும் வேளாண் அலுவலக கட்டடம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டடம் ஆபத்தானநிலையில் உள்ளதால் புதிய கட்டடம் கட்டப்படும் வரை மாற்று இடத்தில் செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இவ்வொன்றிய அலுவலக வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் வட்டார வேளாண் விரிவாக்க மையம் செயல்படுகிறது. மழைக்காலஙளில் இதன் கூரை ஒழுகுவதுடன், சுவர்களில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால்எப்போது வேண்டுமானாலும் சுவர் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் அலுவலர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.இங்கு வரும் விவசாயிகள் கட்டடத்தின் அவல நிலையை பார்த்து உள்ளே செல்லவே அஞ்சுகின்றனர். வெளியே நின்று கொண்டே அலுவலர்களிடம் விவரம் கேட்டு செல்கின்றனர். இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இடம் அளந்து கொடுப்பது தாமதமாகி வருகிறது. மழைக்காலம் துவங்கி தொடர்மழை பெய்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற ஆபத்தான நிலையே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ