காரைக்குடியில் அழகப்பா மருத்துவமனை நவம்பரில் திறப்பு
காரைக்குடி : காரைக்குடியில் டாக்டர் உமையாள் ராமநாதன் 97வது பிறந்த நாள் விழா நடந்தது. அவரது நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தப் பட்டது.அழகப்பா கல்விக் குழும தாளாளர் டாக்டர். ராமநாதன் வைரவன் தலைமையேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி, முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அழகப்பா கல்விக் குழும தாளாளர் ராமநாதன் வைரவன் கூறுகையில், அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, கல்வி யோடு உடற்கல்வியையும் கற்றுக்கொள்ள அழகப்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. தவிர இசை நாட்டியமும் கற்றுத் தரப்படுகிறது. நவம்பர் மாதம் 230 படுக்கை வசதியுடன் கூடிய அழகப்பா மருத்துவமனை திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து 23 ஏக்கரில் அழகப்பா மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.