மேலும் செய்திகள்
சவேரியார் சர்ச் தேர் பவனி
02-Dec-2024
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் உள்ள அமலஅன்னை சர்ச் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இந்த ஆலயத்தில் டிச.,1 அன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் மாலை 5:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு பாதிரியார் அமலன் தலைமையில் பாதிரியார்கள் அந்தோணிராஜா, கிளமென்ட், ஆரோக்கியதாஸ், அற்புத அரசு ஆகியோர் கூட்டு திருப்பலி நடத்தினர். மின்விளக்கு அலங்காரத்தில் புனித மைக்கேல் அதிதுாதர், புனிதஅமல அன்னை தேர்பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளை சுற்றி வந்து சர்ச்யை அடைந்தது. அங்கு திவ்ய நற்கருணை ஆராதனை, திருப்பலி நடந்தது. பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
02-Dec-2024