இடிந்து விழுந்த அம்மா உணவக கூரை
காரைக்குடி:காரைக்குடி அம்மா உணவகத்தில், இடிந்து விழுந்த கூரையை சரி செய்து, விபத்து நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் 2015ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இந்த அம்மா உணவகம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. அம்மா உணவகத்தின் கூரை அதிகாலையில் உடைந்து விழுந்தது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக, உடைந்து விழுந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.