உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை கொட்டும் இடமாக மாறிய அங்கன்வாடி மையம்

குப்பை கொட்டும் இடமாக மாறிய அங்கன்வாடி மையம்

காரைக்குடி : காரைக்குடியில் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதோடு, மைய வாசலில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. சாக்கோட்டை வட்டாரத்தில் 170 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. காரைக்குடி மாநகராட்சி முத்துராமலிங்கதேவர் நகரில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அருகில் ரேஷன் கடையும் உள்ளது. இந்த ரேஷன் கடை முன்பு குப்பை தொட்டியை வைத்து குப்பை கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடும் நிலவுகிறது. அருகிலேயே புதர் செடிகளும் கருவேல மரங்களும் வளர்ந்து கிடக்கிறது. அங்கன்வாடி மையம் எதிரே உள்ள குப்பைத்தொட்டியை அகற்ற அப்பகுதி மக்களும் பெற்றோர்களும் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை