மேலும் செய்திகள்
அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை
26-Sep-2025
தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி தத்தணி. இங்குள்ள பள்ளி அருகில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. இக் கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. அங்கன்வாடி மைய கட்டடம் இருந்த இடம் நீர்பிடிப்பு பகுதி என்பதால் அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டமுடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இந் நிலையில் கிராமத்திற்கு வரும் மெயின் ரோட்டில் சற்று மேடான பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அங்கன்வாடி மாற்றப்பட்டது. ஆண்டுகளானாலும் புதிய கட்டடம் கட்டவில்லை. அந்த மகளிர் சுயஉதவிக்குழு கட்டடமும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டடம் ஆபத்தான நிலையில் இருக்கும் காரணத்தால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப அச்சப்படுகின்றனர்.
26-Sep-2025