உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அங்கன்வாடி ஊழியர் சங்க பேரவை கூட்டம்  

அங்கன்வாடி ஊழியர் சங்க பேரவை கூட்டம்  

சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாநில தலைவர் பாக்கியமேரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட புதிய தலைவராக சித்ரா, செயலாளர் ஜெயமங்கலம், பொருளாளர் லட்சுமி, துணை தலைவர்கள் தவமலர், மலர், மகேஸ்வரி, பார்வதி, இணை செயலாளர்கள் ராதா, கலைச்செல்வி, தமிழ்செல்வி, கலையரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நவ., 4 ல் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை