உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி டாக்டர்கள் மீது தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

பயிற்சி டாக்டர்கள் மீது தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை தாக்கிய வழக்கில், ஒரு மாதத்திற்கு பின் நேற்று சிவகங்கை நேருபஜார் மருதுபாண்டியை 36, போலீசார் கைது செய்தனர். இங்கு செப்., 28 அன்று அதிகாலை 12:00 மணிக்கு டூவீலர் விபத்தில் சிக்கிய பாலமுருகன் 26, சிகிச்சைக்கு சென்றார். பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நியூராஜிஸ்ட் டாக்டர் அன்று தினம் விடுப்பு என்பதால், பாலமுருகனின் காயம் குறித்த சி.டி., ஸ்கேன் அறிக்கையை அலைபேசியில் டாக்டருக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையை சிகிச்சை பெற்று வந்த பாலமுருகனின் உறவினர்கள் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதில், அவர்கள் பயிற்சி டாக்டர்களை தாக்கினர். டீன் சீனிவாசன் புகாரின்படி பாலமுருகன், சூர்யா 27 உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்தனர். பயிற்சி டாக்டர்கள் 2 நாட்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் சூர்யா 27 உட்பட 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், நேற்று மருதுபாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை