உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

திருப்புத்தூர: திருப்புத்தூரில் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்தனர். உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையில் குழுவினர் நகரில் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர். கடை உரிமையாளர்களிடம் குழந்தைத் தொழிலாளர் குறித்து விழிப்புணர்வும்ஏற்படுத்தினர். 14 வயதிற்குட்பட்ட சிறார்களை பணியமர்த்துதல், 14 வயதுக்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துதல் குற்றம் என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இதை மீறுபவர்களுக்கு அபராதமும், 6 மாத சிறை விதிக்கப்படும். கல்வி அறிவு வழங்குவதால் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும். பொதுமக்கள் குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் பற்றி 1098 என்ற எண்ணற்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ