கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்
சிவகங்கை: சிவகங்கை அன்னை முதியோர் இல்லத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார்.தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, அன்னை முதியோர் இல்ல நிர்வாகி பிரிட்டோ கலந்து கொண்டனர். முதியோர்கள் யோகா செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் தன்னார்வலர்கள் வில்லுப்பாட்டு மற்றும் நாடகங்கள் நடித்து காட்டியும், பாடல்கள் பாடியும் முதியோர்களை மகிழ்வித்தனர்.