உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நம்மாழ்வார் விருது க்கு விண்ணப்பம்

நம்மாழ்வார் விருது க்கு விண்ணப்பம்

சிவகங்கை: மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் உயிர்ம எரு பயன்படுத்துவதன் மூலம் பயிர் பாதுகாப்பு, சாகுபடி செய்யப்பட்டு, மண் வளத்தை பாதுகாப்பதாகும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் குறைந்தது 1 ஏக்கரில் உயர்ம வேளாண்மை சாகுபடி செய்திருக்க வேண்டும். முழு நேர உயிர்ம விவசாயியாக இருக்கவேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் இந்த விவசாயத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்வாகும் 3 விவசாயிகளுக்கு தமிழக அரசால் நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இந்தவிருதுக்கான பரிசு தொகை ரூ.2 லட்சம், சான்று மற்றும் பதக்கம் வழங்கப்படும். குடியரசு தினத்தன்று முதல்வரிடம் நேரடியாக பெறலாம். இவ்விருது பெற விரும்பும் விவசாயிகள் செப்., 15க்குள் பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்தி, அக்ரி ஸ்நெட் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ