உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்  

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்  

சிவகங்கை; தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து, அவர்களுக்கு 'தமிழ் செம்மல்' விருது வழங்கப்படும். இத்துடன் ரூ.25,000 ரொக்கம், பாராட்டு சான்றும் உண்டு. விருது பெற விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சுய விபரம், இயற்றிய நுால்கள், கட்டுரைகள் வெளியிட்டிருந்தால் அது பற்றிய விபரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் இருந்தால் அது பற்றிய விபரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரை கடிதம் அவசியம். மேலும் பரிந்துரை கடிதம், தாசில்தாரின் குடியிருப்பு சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 போட்டோவுடன் ஆக., 25 க்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கவும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !