உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழில் பழகுநர் பயிற்சி  

தொழில் பழகுநர் பயிற்சி  

சிவகங்கை:காரைக்குடி அரசு போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பம் வரவேற்பதாக பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கோட்டத்தின் கீழ் 11 கிளைகள் இயங்குகின்றன. இதன் கீழ் 600 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்குகின்றன. இங்கு பொறியியல் பட்டம், பட்டயம், கலை, அறிவியல், வணிக பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் பட்டம், பட்டய படிப்பில் (இயந்திரவியல், தானியங்கிவியல்), கலை அறிவியல், வணிகம் பட்டப்படிப்பை 2022, 2023, 2024, 2025 கல்வி ஆண்டு மற்றும் 2026 மே மாதம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து https://nats.education.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பத்தை ஆக., 28 க்குள் விண்ணப்பிக்கலாம் என்றார். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி