உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்; போலீசார் விரட்டியதில் இருவருக்கு கால் முறிவு

சிவகங்கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்; போலீசார் விரட்டியதில் இருவருக்கு கால் முறிவு

சிவகங்கை; சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவர்களை போலீசார் விரட்டி பிடித்ததில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் போலீசாரை தாக்க முயற்சித்து தப்பியது. போலீசார் ரயில்வே டிராக்கில் விரட்டி சிவகங்கை தொண்டி ரோட்டை சேர்ந்த மதியழகன் மகன் அருண்பாண்டி 22, சாக்ளா தெரு ராமச்சந்திரன் மகன் நித்திஸ்வரன் 21, சோழபுரம் காளீஸ்வரன் மகன் அய்யப்பன் 20, புதுப்பட்டி 16,17 வயது இரண்டு சிறுவர்கள் என 5 பேரை கைது செய்தனர். இதில் அருண்பாண்டி, நிதிைஷ போலீசார் விரட்டியதில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. இருவரும் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.போலீசார் கூறுகையில், இந்த கும்பலின் தலைவர் மதன் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அண்ணன் தம்பி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அந்த வழக்கு நடத்த பணம் தேவைப்பட்டதால் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள வீடுகளில் திருட திட்டம் தீட்டி சிக்கினர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி