உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலை, இலக்கிய கருத்தரங்கு

கலை, இலக்கிய கருத்தரங்கு

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் வீரமாமுனிவரின் 346 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலை இலக்கியப் பயிலரங்கம் நடந்தது. பள்ளியின் தாளாளர் சேவியர் ராஜ் தலைமை வகித்தார். பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் மன்ற இணை செயலாளர் ஜோ லியோ, முதன்மைக் கருத்தாளர் ராதாகிருஷ்ணன், கருத்தாளர்கள் அந்தோணிசகாயமேரி, திருச்சி பேராசிரியர் பெபிட்டோ விமலன்,உலகப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு தேவநேயப்பாவாணர் கட்டுரை அமர்வு, கவிஞர் முடியரசனார் கவி அமர்வு, கவிஞர் அழ.வள்ளியப்பா கதை அமர்வு, வலம்புரி ஜான் பேச்சு அமர்வு என தனித்தனி அரங்குகளில் கட்டுரை, கவிதை, கதை, பேச்சு ஆகிய திறன்களை மேம்படுத்த பயிற்சியளித்தனர். நிறைவு விழாவில் முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் பி.எட்வர்ட் லெனின் பயிலரங்க மதிப்புரை நிகழ்த்தி பரிசுகளை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் ரிச்சர்டு நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி