பா.ஜ., நிர்வாகி மீது தாக்கு
இளையான்குடி : சிறுபாலை கிராமத்தை சேர்ந்த ராஜபிரதீப் பா.ஜ.,மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கும் அண்டக்குடி புதுார் கிராமத்தை சேர்ந்த கலைமணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் கலைமணி சிறுபாலை பஸ் ஸ்டாப் அருகே ராஜ பிரதீப்பை தாக்கியுள்ளார். ராஜ பிரதீப் மற்றும் சிலர் சேர்ந்து கலைமணியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராஜபிரதீப் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், கலைமணி பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.