உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சிவகங்கையில் அனைத்து வாகன டிரைவர் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சங்க மாவட்ட தலைவர் சபரிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பத்மராஜ், துணை செயலாளர் வெங்கட் பேசினர்.டிரைவர்களுக்கு எதிரான ஹிட் அன்ட் ரன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் எந்தவித ஆதாரமின்றி போடப்படும் பொய் வழக்கு முறையை கை விட வேண்டும்.டிரைவர்களுக்கு பணி, உயிர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் பி.ஏ., (பொது) ஜெயமணியிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை