உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சமூக நீதிக்கான விருது

சமூக நீதிக்கான விருது

சிவகங்கை: சமூக நீதிக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம்,1 பவுன் தங்க பதக்கம்,சான்று வழங்கப்படும். இந்த விருதினை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார். எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செய்த திட்டங்கள், பணிகள், அதன் மூலம் பெற்ற சாதனைகள் ஆகிய தகுதி உடையோர் விருது பெறுவதற்கான விண்ணப்பத்தை கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். விண்ணப்பத்துடன், சுயவிபரம், முழு முகவரி,அலைபேசி எண் , சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள், அதற்கான ஆவணங்களுடன் இருக்க வேண்டும். இவ்விருது பெற விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை டிச., 20க்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு பிற்பட்ட, சிறுபான்மையினர் நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை