உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் நேஷனல் அகாடமி சமுதாய கல்லுாரி சார்பில் கர்ப்பிணிகளுக்கு சுகாதார கல்வி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருப்புத்துார் ஒன்றியம் சேவினிப்பட்டியில் நடந்த முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகாதார கல்வி மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.மேலும், தாய் சேய் நலன் பாதுகாக்க பேறு காலத்தில் சத்தான உணவு சாப்பிடவும், பிரசவ காலத்திற்கு பின்னர் பச்சிளம் குழந்தைக்கு தாய்பால் நோய் எதிர்ப்பு சக்தியாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ