மேலும் செய்திகள்
விக்சித் க்ரிஷி சங்கல்ப அபியான் கருத்தரங்கு
29-May-2025
திருப்புவனம்: மத்திய அரசின் 'விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்' விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்புவனம் அருகே குருந்தங்குளத்தில் நடந்தது.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் ராமகிருஷ்ணன் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு பற்றியும், பால் உற்பத்தி மற்றும் ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் நோய் குறித்து பேசினார். குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய தலைவர் செந்துார்குமரன் விவசாய திட்டங்கள், அதன் பயன்கள் குறித்து பேசினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பேராசிரியர் ஆறுமுகநாதன், கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் மலர்விழி, தொழில் நுட்ப மேலாளர் சத்யா பங்கேற்றனர்.
29-May-2025