விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்புத்துார்: திருப்புத்துார் நேசனல்அகாடமி சமுதாயக்கல்லுாரியில் மாணவர்களுக்கு அலைபேசி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் தேவகி. ராமலட்சுமி ஆகியோர் அலைபேசியை பயனுள்ளதாக பயன்படுத்தும் முறை குறித்தும், தவிர்க்க வேண்டியது குறித்தும் விளக்கினர். மேலும் மகளிர் க்கான ஆபத்து கால தொடர்பிற்கு எஸ்.ஓ.எஸ். செயலியை அலைபேசியில் நிறுவி அதனை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார். ஆசிரியர் சிவனேசன் நன்றி கூறினார்.