மேலும் செய்திகள்
சிவகங்கையில் சமத்துவ பொங்கல் விழா
11-Jan-2025
சிவகங்கை; சிவகங்கையில் சாலை பாதுகாப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்தார். பின்னர் தொழுநோய் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். அரசு மருத்துவ கல்லுாரி டீன் சத்தியபாமா, இணை இயக்குனர் (மருத்துவம்) தர்மர், துணை இயக்குனர்கள் (சுகாதாரம்) மீனாட்சி, (தொழுநோய் பிரிவு) கவிதாராணி, வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், கூடுதல் எஸ்.பி.,கலைக்கதிரவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இசக்கி, எஸ்.ஐ., அழகுராணி உட்பட டிரைவிங் பயிற்சி மைய உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் பங்கேற்றனர்.
11-Jan-2025