மேலும் செய்திகள்
கோவில் வளாகத்தில் கிடந்த பெண் குழந்தை மீட்பு
12-Jan-2025
காரைக்குடி : கோட்டையூர் பேரூராட்சி ராமசாமி அம்பலம் தெரு கால்வாயில் நேற்று காலை 6:00 மணிக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.அதிக பனிமூட்டம் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லை.அப்பகுதியை சேர்ந்த கார்த்திகா தண்ணீர் பிடிக்க வந்த போது குழந்தை சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன , பெண் குழந்தை கிடந்தது. தொப்புள் கொடியுடன் இருந்த அந்த குழந்தையை கார்த்திகா மற்றும் அவரது கணவர் கணேசன், கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தை சேர்த்தனர்.குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Jan-2025