உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாரியம்மன் கோயிலில் பேனர்கள் அகற்றம்

மாரியம்மன் கோயிலில் பேனர்கள் அகற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் மாரியம்மன் கோயில் வளாகத்தினுள் பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் பலரும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மை உள்ளிட்டவைகளை நேர்த்திகடனாக செலுத்தி வருகின்றனர். கோடை வெயில் காரணமாக கோயில் வளாகத்தில் நிழலுக்காக கீற்று கொட்டகையும் அமைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் பேனர்களை வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுவது குறித்து தினமலரில் செய்திவெளியானது. இதன் எதிரொலியாக மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில், போலீசார் கோயில் வளாகத்திற்குள் கட்டியிருந்த டிஜிடல் பேனர்களை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை