உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதுக்கடை முற்றுகை

மதுக்கடை முற்றுகை

காரைக்குடி:புதுவயல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் வழியில் இருக்கும் மதுக்கடையால் மாணவ மாணவிகளுக்கு தினமும் பிரச்னைகள் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த மதுக்கடையை அகற்ற புதுவயல் பேரூராட்சியில் 4 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை கடை அகற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து புதுவயல் பேரூராட்சி தலைவர் முகமது மீரா தலைமையில், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை