புதிய நீர்நிலைகளை தேடும் பறவைகள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் புதிய நீர்நிலைகளை பறவைகள் இரைக்காக தேடி அலைகின்றன.இவ்வொன்றியத்தில் கொள்ளுக்குடிபட்டி கண்மாயில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து திரும்பிச் செல்லும். இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் வேங்கைப்பட்டி, வடவன்பட்டி, கோவில்பட்டி, சூரக்குடி உள்ளிட்ட கிராம கண்மாய்களில் தற்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன.