உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., நிர்வாகி கைது மருத்துவமனையில் அனுமதி

பா.ஜ., நிர்வாகி கைது மருத்துவமனையில் அனுமதி

காரைக்குடி : காரைக்குடியில் பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜனை போலீசார் நேற்று கைது செய்தனர்.சிவகங்கை பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசினார்.அதில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பேசி, இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று காரைக்குடி போலீசார், விசாரணைக்காக மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அங்கே அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.மருத்துவ மனையில் சிகிச்சைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ